கேரளா இளம்பெண் அரபு நாட்டில் இளம்பெண் குத்திக்கொலை.

கேரளாவின் திருவனந்தபுரம் நெடுமங்காட்டைச் சேர்ந்த அனிமோல் (26) என்பவர் துபாய் கராமாவில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். துபாய் போலீசார் அனிமோலின் காதலனும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவருமான அபின் லால் மோகன்லால் (28) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் இந்தியாவுக்கு தப்ப முயன்றபோது விமான நிலையத்தில் பிடிபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. அபின் லால் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அனிமோல் துபாயில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
.
Tags : அரபு நாட்டில் இளம்பெண் குத்திக்கொலை