முன்கூட்டியே தொடங்கியதென்மேற்கு பருவமழை இந்திய வானிலை ஆய்வு மையம்.

by Editor / 14-05-2025 10:34:54am
  முன்கூட்டியே தொடங்கியதென்மேற்கு பருவமழை இந்திய வானிலை ஆய்வு மையம்.

தென்மேற்கு பருவமழை தெற்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் நேற்று (மே 13) முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதி கேரளா, தமிழகத்தில் தொடங்கி ஜூலை 8ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் முழுமை பெறும். இது செப்டம்பர் 17ஆம் தேதி வாக்கில் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முழுமையாக ஓய்ந்துவிடும்.

 

Tags : முன்கூட்டியே தொடங்கியதென்மேற்கு பருவமழை இந்திய வானிலை ஆய்வு மையம்

Share via