பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் - ஜே.பி.நட்டா

by Staff / 10-03-2023 03:50:28pm
 பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் - ஜே.பி.நட்டா

தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜக. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக. பல்வேறு மாநிலத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

Tags :

Share via
Logo