உத்திரபிரதேசம் லக்னோ தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்
உத்திரபிரதேசம் லக்னோவின்கஞ்ச்பகுதியில் உள்ள உஷா மேத்தா மார்க்கில் அமைந்துள்ள மூன்று அடுக்கு வணிக வளாகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த 'ரமேஸ்வரம் இன்ஸ்டிடியூட்' என்ற அனிமேஷன் மற்றும் கேமிங் பயிற்சி மையத்தில் இந்த விபத்து நேரிட்டது. பயங்கர தீ விபத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் தரை தளத்தில் இயங்கி வந்த விற்பனையகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. . 21 மாணவர்கள் அங்கே இருந்துள்ளனர் அதில் பலர் மாடியிலிருந்து கீழே குதித்து காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது .இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
Tags :


















