துனிசியாவில் ஆட்சிக்கலைப்பு:

by Editor / 26-07-2021 04:34:43pm
 துனிசியாவில் ஆட்சிக்கலைப்பு:

 

 

 

துனிசியாவில் அதிபர் கைஸ் சையத்  அரசு கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுவதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

துனிசிய நகரங்களில் ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். சில கட்சிகள் அதிபரின் முடிவை  கண்டித்திருந்த போதிலும், ஆட்சிக்கலைப்புக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான துனிசியாவில் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததன் காரணமாக அந்நாட்டு அதிபர் அரசை கலைக்க  உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, துனிசியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டும், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்க   உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இஸ்லாமிய ஈர்க்கப்பட்ட என்னாதா கட்சிக்கு  எதிராக ஆயிரக்கணக்கான துனிசியர்கள் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

இதனிடையே, துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி கடந்த வருடம் ஜூலை மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபரில் அங்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.71 சதவீதம் வாக்குகளைப் பெற்ற கைஸ் சையத் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் துனிசில் வெடித்த போராட்டங்கள் நபியூல், சவுசி, கெய்ரோவான், டியூசியோர் உள்ளிட்ட இடங்களுக்கும் பரவியது. பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சியின் அலுவலகங்கள் இளைஞர்களால் சூறையாடப்பட்டன.

இதை தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய அதிபர் கயீஸ்தேசிய அளவிலான பதற்றம் எதிரொலியாக நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை. இதனால் நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமரை தேர்வு செய்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதிபர் கயீசின் அறிவிப்பை அடுத்து முக்கிய சாலைகளில் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். புதிதாக நியமிக்கப்பட இருக்கும் பிரதமர் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சரிந்து கிடக்கும் துனிசிய பொருளாதாரத்தை புனரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அதிபர் கயீஸ் சயீத் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியை பதவிநீக்கம் செய்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Tags :

Share via

More stories