திருத்தணி முருகன் கோவிலில் அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்

by Staff / 11-04-2024 11:22:13am
திருத்தணி முருகன் கோவிலில் அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை தினம் என்பதால் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்யப்பட்டது. இதில், நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா மற்றும் ஆந்திர ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெத்த ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி இருவரும் அதிகாலை நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டார். பின்னர் அவர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories