விருதுநகரில் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடல்

by Editor / 14-07-2025 12:24:32pm
விருதுநகரில் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடல்

விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடரும் பட்டாசு வெடி விபத்துக்களால், அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என்பதால், அச்சத்தில் உரிமையாளர்கள் ஆலைகளை மூடியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via