குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த மண்மலை பகு தியை சேர்ந்த தொழிலாளி சிவகுமார், தன்னுடைய மனைவி தீபா மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத் துக்கு நேற்று வந்தார். திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெய்யை தங்கள் மீது ஊற்ற முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுவிசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மனு கொடுக்க வந்த சிவக்குமார் கூறுகை யில், செந்தாரப்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிம னையில் நடத்துனராக பணிபுரிந்து வரும் ஒருவர், 2021- ம் ஆண்டு கால்நடைத்துறையில் உதவியாளர் பணிக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி முத லில் ரூ. 7 லட்சமும், நிலத்தை விற்பனை செய்து ரூ. 8 லட்சமும் கொடுத்தேன். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நப ரிடம் வேலை குறித்து கேட்டபோது, வேலை வாங்கி தர முடியாது என்றும், பணமும் தரமுடியாது என்றும் கூறி விட்டார்.இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்து குடும்பத்தினருடன் தீக்குளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன். எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும், என்றார்.
Tags :