மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாணவர்களுக்கு மாத்திரை விநியோக மருந்தக உரிமையாளர் கைது
மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் நரம்புத்தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை மாணவர்களுக்கு விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் மருந்தகத்திற்கு சீல் வைக்க பரிந்துரைத்தனர். காமராஜர் சாலையில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் மயக்க நிலையில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். விசாரணைகள் அருகில் உள்ள மருந்தகத்தில் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் விநியோகிக்க செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில் நேரடியாக காவல் உதவி ஆணையர் மாணவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பி அதே மருந்தகத்தில் மாத்திரை வாங்கி வரவும் கூறியுள்ளார்.மாணவர்கள் மாத்திரையுடன் வந்ததை அடுத்து மருந்து உரிமையாளர் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் மருந்தகத்திற்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரும் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
Tags :



















