கோழி சாப்ஸ் செய்முறை

by Admin / 07-08-2021 05:22:13pm
கோழி சாப்ஸ் செய்முறை

தேவை

கோழி – 1 கிலோ

பச்சை மிளகாய் – 10

இஞ்சி – 2 அங்குலம்

பெரிய வெங்காயம் – 1

முட்டை – 3

உப்பு தேவையான அளவு

செய்முறை

1 கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 அங்குலம் இஞ்சி, 10 பச்சைமிளகாய் 1 பெரிய வெங்காயம், இவற்றை அரைத்துக்கொள்ளவும். கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும். ப்ரஷர் குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதன் மீது பிசிறி வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வைத்து மூடி, குக்கரின் மூடியையும் மூடவும். வெயிட் வைக்கவும். விசில் சப்தம் கேட்டதும் இறக்கவும். குக்கர் திறந்த வந்த பின், கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்துக்கொள்ளவும். 3 முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு, நுரைக்க அடித்துக்கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 100 கிராம் ஊற்றி, காய்ந்ததும், தீயை மிதமாக்கவும். கோழிக்கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டைக்கலவையில் நனைத்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு தடவைக்கு 6 துண்டுகள் வீதம் போட்டு பொறிக்கலாம்.

 

 

 

 

 

Tags :

Share via