தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக இடி மின்னலோடு கூடிய கன மழை
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,மே 10ஆம் தேதி தமிழ்நாடு காரைக்கால் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக இடி மின்னலோடு கூடிய கன மழை பெய்து வருகிறது.தமிழகம் முழுவதும் மழை பெய்துவரும் மாவட்டங்கள்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளி செல்லமுடியாமல் அவதி,
திருவள்ளூர் பெரியகுப்பம் மணவாளநகர் திருப்பாச்சூர் பூண்டி தாமரைபாக்கம் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் ஆரம்பாக்கம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு லேசான மழை.
திருவாரூரில் நள்ளிரவு முதல் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை நள்ளிரவு தொடங்கிய இந்த பயங்கர சூறைக்காற்றுடன் கன மழை தொடர்ந்தது.திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேந்தமங்கலம் புலிவலம் கடாரங்கொண்டான் அம்மையப்பன் அடியக்கமங்கலம் மாங்குடி குளிக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லியம்பாளையம் கொத்தாம்பாடி மஞ்சினி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மழையால் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் அவதி.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் திருமலை அகரம், செளந்திரசோழபுரம், செம்பேரி, மாளிகைகோட்டம், சின்னக்கொசப்பள்ளம், பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தற்போது பெய்து வருகிறது.
திருப்பத்தூரில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை!.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீடீர் சூறை காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வானம் கருமேகம் சூழ்ந்து ஒரு சில பகுதியில் மிதமான மழையும் சில இடங்களில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Tags : Widespread thundershowers across Tamil Nadu from midnight yesterday
















.jpg)


