இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மாற்றம் காணுமா...?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று (நவ., 05) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உட்கட்சி பூசல், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன்னில் சந்தித்த நிலையில் இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.அதிமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் திமுகவுக்கு சென்றது..என பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : அதிமுக மாவட்டச் செயலாளர்கள்



















