இந்தியாவிற்கு 5ஜி சேவை 

by Admin / 29-11-2021 10:09:05pm
 இந்தியாவிற்கு 5ஜி சேவை 

 

 இந்தியாவிற்கு 5ஜி சேவை 
வேகமான இணைய சேவை அவசியமானது என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள் என்ற பிம்பம் இந்தியாவில் கட்டமைக்க பட்டுள்ள நிலையில் வெறும் 61.7 % மக்கள் தான் இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிலும் பெரும்பாலானோருக்கு 4ஜி சேவையே தேவைக்கு அதிகமானதாக தான் இருக்கிறது .  5ஜி சேவை இந்தியாவிற்கு மிக அத்தியாவசியமானது வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவதற்கு அவசியமான அளவுகோள் என்பதாலும் 5ஜி இணைய சேவை மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்து இருந்தது
 ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட  13 தனியார் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதிபெற்று  5G சோதனைகளை நடத்தி வந்தன.

 2021ஆண்டிற்குள் 5G சோதனைகளை முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோதனைகளை தொடர்வதற்கு மார்ச் 2022 வரை கூடுதல் அவகாசத்தை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  (TRAI) அனுமதி அளித்தது ஸ்பெக்ட்ரம் புதிய அடிப்படை விலையை பிப்ரவரி அல்லது மார்ச் 2022 ஆண்டின் இறுதிக்குள் பரிந்துரைக்கலாம் .

புதிய விலைப்பட்டியல் நிர்ணயம் செய்த அடுத்த சில நாட்களிலேயே 5Gஏலம் நடத்தப்பட்டு  5ஜி சேவை 15 ஆகஸ்ட் 2022 சுதந்திர தினத்தன்று தொடங்கலாம்.
 
ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட வெபிணாரில் கலந்துகொண்ட மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ண இத்தகவல்களை வெளியிட்ட பின்னர் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 6ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே அறிவித்துவிட்டதாகவும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்

 6ஜி நெட்வொர்க்குகளை இயக்க தேவையான டெலிகாம் மென்பொருள் நாட்டிலேயே உருவாக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்  


 

 

Tags :

Share via