சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது
கேரள மாநிலத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிறை புத்தரிசி பூஜை நாளை காலை 4 மணிக்கு நடைபெறுகிறது.திருவிதாங்கூர் தேவசத்திற்கு சொந்தமான செட்டிக்குளக்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல்போக சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, அதை சபரிமலைசன்னிதானத்தில் வைத்து வழிபடுவது நிறைபுத்தரிசி பூஜையாகும்.
நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் – குருவாயூரப்பன் கோயிலில் இன்று சபரிமலையை பின்பற்றி நிறைபுத்தரிசி கொண்டாடப்படவுள்ளது.
Tags : sabarimalai