"உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு"

by Staff / 23-07-2024 11:56:45am

உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என பட்ஜெட் தாக்கல் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்‌. காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via