அஜித்குமார் மரணம் தொடர்பாக புதிய மனு
சிவகங்கை அருகே போலீசார் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார் வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதிய வழக்கு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்குகள் நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில், புதிய மனுவையும் நாளை விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புதிய மனுவையும் நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.
Tags :



















