பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி, 17க்கும் மேற்பட்டோர் காயம்

by Editor / 07-07-2025 01:16:18pm
பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி, 17க்கும் மேற்பட்டோர் காயம்

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று காலை பேருந்து எதிரே வந்த காருடன் மோதி கவிழந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 17க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து, தசுஹா-ஹாஜீபூர் சாலையில் நடந்தது. காயமடைந்தவர்களில் 15க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் அமிர்தசரஸுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் பேருந்தை அப்புறப்படுத்தினர்.

 

Tags :

Share via