மகனை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை

தென்காசி மாவட்டத்தில் 6 வயது மகனை பெற்ற தந்தை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்த முனியாண்டி கார்த்திகா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இதில் மகன் மகிழன் தனக்கு பிறந்த பிள்ளை இல்லை என சந்தேகமடைந்த முனியாண்டி சொந்த மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :