டெல்லியில் 5 நாட்கள் மதுக்கடைகள் இயங்காது

by Staff / 03-09-2023 02:16:41pm
டெல்லியில் 5 நாட்கள் மதுக்கடைகள் இயங்காது

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படுகின்றன. ஜி20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து சந்தைகள், கடைகள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மதுபான கடைகள் இந்த நேரத்தில் மூடப்படும். அதேபோல், செப்டம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமையேற்றுள்ள இந்தியா, அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்களுக்கான மாநாட்டை வரும் 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடத்துகிறது.

 

Tags :

Share via