ரயிலில் கோக்கைன் இழுத்த இளைஞர்கள் கைது

by Staff / 03-09-2023 01:53:16pm
ரயிலில் கோக்கைன் இழுத்த இளைஞர்கள் கைது

மும்பை உள்ளூர் ரயிலில் இளைஞர் ஒருவர் பொது இடத்தில் அமர்ந்து கோக்கைன் இழுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் பயணிகள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் கோக்கைன் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், வழக்கு பதிவு செய்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவருடன் மேலும் 6 இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண்ணை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முழு விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via