மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இன்று மாலை ஐந்து மணிக்கு புதுக்கோட்டை திருச்சி சாலையில் உள்ள திருகோகர்ணம் பள்ளத்தி வயல் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் முன்னெடுத்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற மாநில அளவிலான பிரச்சார பயணத்தின் நிறைவு விழா முன்னிட்டு நடைபெறும் பொது கூட்டமாகும். இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியின் தலைவர்கள் ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டம் கிட்டத்தட்ட 49 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பான சூழலில் நடைபெறுகிறது.. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை தொடர்ந்து ,நாளை திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சுவாமி தரிசனத்லும் கலந்துகொள்ள உள்ளார்.
Tags :



















