மார்ச் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்தனியாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டங்கள்
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என் ,ஆனந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்தனியாக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் 2026 -சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அடுத்த கட்ட பணிகள் தேர்தல் பிரச்சார உத்திகள் மற்றும் பூ தேஜெண்டுகள் ஆகியோருக்கான பொறுப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அந்தந்த தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் இணைப்பார்வையாளர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளா.ர் அத்துடன் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் தொகுதியில் உள்ள கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். அத்துடன் தலைமை அனுமதி இல்லாமல் நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது என்றும் இதற்கு முன் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :

















