இருதலைவர்களையும் சந்திக்க வைக்க அதிமுக நிர்வாகிகள் முயற்சி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடுமையான கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளார் பழனிசாமியையும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையும் நேருக்கு நேராக சந்திக்க வைக்க அதிமுகவின் மூத்த தலைவர்கள் லெவலில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இருவரும் சந்தித்து பேசினால் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையில் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Tags : AIADMK executives try to get the two leaders to meet