அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை காரணமாக அவரது வீட்டின் அருகே ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
Tags :