தேசிய குழந்தைகள் நலத் திட்ட வாகனத்தில் 1200 போலி மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது .

by Editor / 13-06-2022 12:22:16pm
தேசிய குழந்தைகள் நலத் திட்ட வாகனத்தில் 1200 போலி மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது .

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல்நிலையம் அருகே சிப்காட் போலீசார் இன்று அதிகாலை 2மணி அளவில் காவல்நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திருச்சுழியிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற தேசிய குழந்தைகள் நலத்திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படக்கூடிய வாகனம் நிறுத்தி சோதனை செய்தனர்.

 அதில் 1.5 லட்சம் மதிப்பிலான  சுமார்1200 போலி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து  எடுத்து பாட்டில்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன் மற்றும் ஜெயவீரபாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பியோடிய மகேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். 

தேசிய குழந்தைகள் நலத் திட்ட வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories