கஞ்சா விற்பனைக்கு இடையூறு.. வீட்டின்மீது பெட்ரோல் குண்டுவீச்சு

by Editor / 06-08-2025 12:33:46pm
கஞ்சா விற்பனைக்கு இடையூறு.. வீட்டின்மீது பெட்ரோல் குண்டுவீச்சு

திண்டுக்கல் மாவட்டத்தில், கஞ்சா விற்பனைக்கு இடையூறு செய்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே நிர்மல்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்துவந்துள்ளார். பக்கத்து வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அவரது விற்பனைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த நிர்மல்குமார், சிசிடிவி பொருத்தப்பட்ட வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via