டாஸ்மாக் கடையில் ஊழியர்கள்மோதல்.

செங்கல்பட்டு மாவட்டம் கீழ்வலம் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில், ஊழியர்கள் சிலர் பணவரவு செலவு காரணமாக மோதிக்கொண்டதாக்க கூறப்படுகிறது.. இந்த விவகாரம் காரணமாக, 5 பேரை சஸ்பெண்ட் செய்து, டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது. கடையில் பணிபுரிந்து வந்த 4 ஊழியர் மற்றும் மதுபான கடையின் மேற்பார்வையாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மாற்று ஊழியர்களை கொண்டு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. மோதல் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.டாஸ்மாக்கில் சரக்கை வாங்கி குடிச்சிட்டுத்தான் சண்டைபோடுவாங்கன்னு பார்த்த இவங்களே சண்டைபோட்டு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : டாஸ்மாக் கடையில் ஊழியர்கள்மோதல்.