தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்பதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை நீடிக்கிறது.
Tags :



















