கர்நாடக பாஜக எம்எல்ஏ உதவியாளரின் மருமகன் வீட்டில்வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ரூ.1.20 கோடி

by Staff / 31-03-2024 02:01:57pm
 கர்நாடக பாஜக எம்எல்ஏ உதவியாளரின் மருமகன் வீட்டில்வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ரூ.1.20 கோடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (35). இவர், உரிய ஆவணமின்றி பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சம் பணத்தை கடந்த 28ஆம் தேதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று லோகேஷ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி வீட்டில் வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ.1.20 கோடி பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. லோகேஷ், கர்நாடக பாஜக எம்எல்ஏ உதவியாளரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via