ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுக்கள் முன்பதிவு:அமல்

ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுவரை ரயில் நிலைய டிக்கெட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரைல்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் இணையதளம் மற்றும் செயலி மூலம் ரயில் டிக்கெட், விமான டிக்கெட், சுற்றுலா பேக்கேஜ் ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வசதியாக பேருந்துகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சோதனை முறையாக இருந்த பேருந்து முன்பதிவு அமல் செய்யப்பட்டுள்ளது . ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு https://www.bus.irctc.co.in/home என்ற இணையதளத்திற்கு சென்று எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும்? எந்த பேருந்தில் பயணம் செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்களை அறிந்து கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த அறிவிப்பை ஐஆர்சிடிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகள் மட்டும் என்று தனியார் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் இதற்காக நாடு முழுவதும் 50 ஆயிரம் பேருந்து ஆபரேட்டர்களுடன் ஐஆர்சிடிசி இணைந்துள்ளது.
பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது எந்தவிதமான கூடுதல் கட்டணமும் கிடையாது பேருந்துகளின் கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. பேருந்து, விமான மற்றும் ரயில் நிலைய டிக்கெட்டுகளை சுலபமாக முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்து கொடுத்த ஐஆர்சிடிசி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Tags :