தாய்,மகன் 4 பேர் கொடூரமான முறையில் படுகொலை.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கெம்மண்ணு பகுதியில் உள்ள நெசர் கிராமத்தில் ஹசீனா (48) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு அஃப்னான் (23), அனாஜ் (21), அசீம் (14) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ஹசீனாவின் கணவர் வளைகுடா நாட்டில் பணிபுரிகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் இவர்கள் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். காப்பாற்ற சென்ற அப்பகுதி மக்களையும் மிரட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : தாய்,மகன் 4 பேர் கொடூரமான முறையில் படுகொலை.