மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு .

சென்னை மணலி பல்ஜி பாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்து மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மூலம் பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், ஆலையில் இயந்திரத்தின் அருகே இருந்த கேஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags : மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு .