247 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்ற தமிழக அரசு

by Staff / 11-08-2023 12:51:36pm
247 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்ற தமிழக அரசு

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் தைவான் நாட்டு பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கு தேர்வாகி உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம், ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் 247 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதற்கான பாராட்டு விழா, பள்ளி கல்வி துறை சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, தேர்வான அனைத்து அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து, சான்றிதழ்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

Tags :

Share via