அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தொடங்கியது.

அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) முதல் தொடங்கியுள்ள நிலையில், காலை 10 மணிக்கு மேல் முதியோர், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறான காலகட்டத்தில் அதிக நீரிழப்பு அபாயம் இருக்கும் என்பதால் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம். குறிப்பாக கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்வதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். குழந்தைகளை நண்பகல் வேளைகளில் விளையாடவும் அனுமதிக்காதீர்கள்.
சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் வெயில் இருக்கும் அடுத்த 25 நாட்களுக்கு இந்த விஷயம் முக்கிய மக்களே!
*கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை பதிவாகும்.
*உடலுக்கு தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
*தினமும் காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 மணிக்குள் வெளியே செல்ல வேண்டாம்.
*குடை, தொப்பி அணிந்து வெளியே செல்ல வேண்டும்.
*வெயிலில் காரை நிறுத்திவிட்டு குழந்தைகளை அதனுள் இருக்கச்சொல்லி எங்கேயும் செல்லாதீர்கள்.
*டீ, காபி, மதுபானத்தை குடிக்காதீர்கள்.
*லெமன் ஜூஸ், மோர், பழச்சாறுகளை குடியுங்கள்.
Tags : அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தொடங்கியது.