அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் கே , ஏ.சேகர் பாபு சென்னை வீட்டிற்கும் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறைஅமைச்சர் கே .என். நேரு வீட்டிற்கும், திருச்சியில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைவ ர்மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்களின் வீடுகளில் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தினர்..சோதனையின் முடிவில், இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்..சமீபகாலமாக தமிழகத்தில் முக்கிய அரசியல் ,திரைப்பட நட்சத்திரங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கும் நடிகர் அஜித் குமாருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் எஸ் வி சேகருக்கும் வெடிகுண்டு மிரட்டப்பட்ட நிலையில் இன்று தமிழக அமைச்சர்களுக்கு காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது., .இந்த தொடர் மிரட்டல்களைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை இந்த வழக்குகளை விசாரிக்க பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு மாற்றியுள்ளது..
Tags :



















