டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம்
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் சங்கம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் கால வரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.. இப் போராட்டத்தில் முக்கிய அம்சம், 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரியும் தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான காலம் வரை ஊதியம் மற்றும் பிற சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் கண்ணியமான வாழ்வுரிமை மற்றும் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதோடு காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் ஏற்படும் கூடுதல் பணி சுமையை மற்றும் செலவுகளை தவிர்க்க தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :



















