சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

by Staff / 01-01-2024 05:15:55pm
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ஆரோவில் அருகே உள்ள நாவற்குளம், அய்யனாா்கோவில் தெருவைச் சோந்தவா் ராஜி மகன் விக்கி என்ற ஐயப்பன்ராஜ் (21). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பன்ராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். ஹொமிஸ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ஐயப்பன்ராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் ஐயப்பன்ராஜை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

 

Tags :

Share via

More stories

Logo