முதல்நாள் தந்தை, அடுத்த நாள் மகள் கொரோனாவால் மரணம்!

by Editor / 24-05-2021 08:14:30am
முதல்நாள் தந்தை, அடுத்த நாள் மகள் கொரோனாவால் மரணம்!

மதுரையில் தந்தையும், அவரது மகளான பெண் நீதிபதியும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். முதல் அலையின் போது பாதிப்பு, உயிரிழப்பு இரண்டு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது உயிரிழப்பு மிக அதிகமாக உள்ளது. ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த வனிதா (48) தஞ்சாவூரில் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை காமராஜ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

அவருக்கு உதவியாக இருந்த நீதிபதி வனிதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் . இந்நிலையில் வனிதா கடந்த 7 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . 
இந்நிலையில் நோய் பாதிப்பு தீவிரம் அடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் அவரது தந்தை காமராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார் . தொடர்ந்து , நீதிபதி வனிதா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மதுரை, திருவில்லிபுத்தூர், திருச்சி ஆகிய நீதிமன்றங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo