ஆட்டோ விபத்தில் இரு சிறுவர்கள் பலி: முதல்வர் மு. க. ஸ்டாலின் 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

by Staff / 25-02-2024 04:31:21pm
ஆட்டோ விபத்தில் இரு சிறுவர்கள் பலி: முதல்வர் மு. க. ஸ்டாலின்  2 லட்சம்  நிதியுதவி அறிவிப்பு

விழுப்புரம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இரு சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கப்பை கிராமத்தில் யுவராஜ் என்பவர் தன் குடும்பத்தாருடன் தனது சொந்த ஆட்டோவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி அருகிலிருந்த தரைக் கிணற்றில் விழுந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த யுவராஜ் என்பவரின் இரு மகன்கள் பிரதீஷ் (வயது 9) மற்றும் ஹரிபிரசாத் (வயது 8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது பெற்றோருக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories