டெல்லியில்  85 பேருக்கு கொரோனா

by Editor / 26-06-2021 08:30:11pm
டெல்லியில்  85 பேருக்கு கொரோனா

 


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டின் மிக குறைவான பாதிப்பாகும். கொரோனா பாதிப்பு விகிதம் 0.12 சதவிதமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,961 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 158 பேர் குணமடைந்துள்ளனர். 
தற்போது டெல்லி முழுவதும் 1598 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது, மார்ச் 3ம் தேதிக்கு பிறகு குறைவாக எண்ணிக்கை ஆகும். டெல்லியில் இதுவரை 14.33 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo