மேகதாது விவகாரம்: பா.ஜ., இன்று உண்ணாவிரதம்

by Editor / 05-08-2021 08:20:11am
மேகதாது விவகாரம்: பா.ஜ., இன்று உண்ணாவிரதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மேகதாது அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் தஞ்சை மாவட்டம் பனகல் பில்டிங் அருகில் இன்று காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். உண்ணாவிரதத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

Tags :

Share via