தமிழகம் முழுவதும் 5 ஜி சேவை : ஏர்டெல்

by Staff / 18-11-2023 12:26:09pm
தமிழகம் முழுவதும் 5 ஜி சேவை : ஏர்டெல்

ஏர்டெல் '5G பிளஸ்' சேவை பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் சோதனை ஓட்டமாக ஒரு சில நகரங்களில் மட்டும் சோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில், 5 ஜி சேவை தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் 5Gசேவை அறிமுகப்படுத்திய ஒரே வருடத்தில் தமிழகத்தில் 4.2 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via