திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரவு நேரத்திலும் தொடரும் அறுவடை பணி.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த வருடம் ஒரு லட்சத்து 50,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கலந்து சில நாட்களாக கன மழை பெய்ததன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பாதிப்படைந்தது.இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லாத நிலையில் குறுவை அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதி உருவாகி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து மீண்டும் கன மழை பெய்தால் குறுவை நெற்பார்கள் முழுவதுமாக பாதிக்கப்படும் என கருதி திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக விவசாயிகள் இரவு நேரம் என்று பார்க்காமல் அறுவடை இயந்திரம் மூலம் தங்களது வயல்களில் அறுவடை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரவு நேரத்திலும் தொடரும் அறுவடை பணி.



















