உயிர் நீத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா.
முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா’ என திருச்சி உறையூர் தவெக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், “தவெக முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம். 15 ஆண்டு காலமாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம் எங்களை மறந்து விட்டாயே. கட்சி மாநாட்டிலும், பொது கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே. கரூர் குடும்பத்திற்கு தத்து பிள்ளையாக இருப்பதாக கூறியுள்ளீர்கள். எங்கள் குடும்பம் மட்டும் நடு ரோட்டில் கிடப்பதா?” என கேள்வி எழுப்பி ஓட்ட ப்பட்டுள்ள சுவரொட்டியால் பரப்பரப்பு உருவாகியுள்ளது.
Tags : உயிர் நீத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா.



















