by Staff /
09-07-2023
12:12:16pm
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே 14 வயது சிறுமி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய் இறந்த பிறகு இவரை 2015ஆம் ஆண்டு முதல் இவரது தந்தை பாலியல் வல்லுறவு செய்து வந்துள்ளார். இதை அக்கம்பக்கத்தினர் கண்டறிந்து பட்டுக்கோட்டை போலீசில் புகாரளித்தனர். போலீசார் தந்தையை 2019ஆம் ஆண்டில் கைது செய்த நிலையில், தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜி.சுந்தரராஜன், சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
Tags :
Share via