தீபாவளிக்கு பின்னர் சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

by Editor / 25-10-2022 11:37:37am
தீபாவளிக்கு பின்னர் சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

தீபாவளிக்கு பின்னர் தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. நாளை 26 ஆம் தேதி அன்று (புதன்கிழமை) வழக்கம்போல் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்குத் திரும்ப 854 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 1130 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன. இந்த மூன்று நாட்களும் வழக்கம் போல் இயக்கப்படும் 6300 பேருந்துகள் 6852 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 13 ஆயிரத்து 1052 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo