தமிழகத்தில் எப்போது தெரியும் சூரிய கிரகணம்

நாடு முழுவதும் இன்று மாலை சூரிய கிரகணம் தென்படுகிறது; இதை வெறுங்கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிரகணத்தை காண பிர்லா கோலரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை தோன்றும். இந்த சூரிய கிரகணம் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், பூனே ஆகிய இடங்களில் தென்படும். இது நடப்பாண்டிற்கான கடைசி சூரிய கிரகணமாகும்
Tags :