ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

by Admin / 14-03-2026 09:29:05am
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. கடந்த பிப்ரவரி கடைசியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அவரது தந்தை அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மொஜ்தபா காமெனி புதிய உட்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க பாதுகாப்பு பென்டகன் தலைவர் பீட் ஹெக் செத் மற்றும் ஊடக அறிக்கையின் படி புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா காமெனி காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் தனது ஒரு காலை இழந்திருக்கலாம் என்றும் வயிறு அல்லது கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அறிக்கைகள் அவர் கால் கை மற்றும் முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றன. இதற்கு ஈரான் அரசு அதிகாரிகள் அவர் காயம் அடைந்திருப்பதை ஓரளவு உறுதிப்படுத்தி நாளும் பாதுகாப்பாகவும் நலமாகவும் அவர் இருப்பதாக தெரிவித்துள்ளனர். புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி பதவியேற்ற பிறகு இதுவரை பொது மேடைகளிலோ அல்லது வீடியோ பதிவுகளிலோ தோன்றவில்லை அவர் முதல் முதலாக தொலைக்காட்சி அறிக்கை வழியாகவே அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories