சென்னையில் ரவுடிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர்
சென்னை ஆலந்தூரை அடுத்த பழவந்தாங்கல் கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் விஜயன் (32). இவர், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் இரண்டாம்நிலைக் காவலராகப் பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகி, ஐந்து மாதக் கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. காவலர் விஜயனின் மைத்துனன் வாசுதேவன். இவரின் நண்பர் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த அஜ்மீர் காஜா. இவர்கள் இருவரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகின்றனர். கடந்த 6.2.2023-ம் தேதி வாசுதேவனும், அவரின் அக்காள் கணவருமான காவலர் விஜயனும் காய்கறி வாங்க பைக்கில் சென்றனர். அப்போது, வாசுதேவனுக்கு போன் செய்த அஜ்மீர் காஜா, தன்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள நோபல் தெருவில்வைத்து சிலர் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். உடனே வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வாசுதேவனிடம் பதற்றுத்துடன் கூறியிருக்கிறார்.அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வாசுதேவன், விவரத்தை காவலர் விஜயனிடம் கூறினார். பின்னர் இருவரும் அஜ்மீர்காஜாவைக் காப்பாற்ற அங்கு சென்றிருக்கிறார்கள். அப்போது ஆலந்தூர் கண்ணன் காலனியைச் சேர்ந்த அஜீத் அலி என்கிற மணிகண்டன், ரவிக்குமார், வினோத்குமார், விவேக் ஆகியோர் அஜ்மீர் காஜாவைத் தாக்கியிருக்கிறார்கள்.ரவுடிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் விஜயன் உடல் சொந்த ஊரான அரூர் அடுத்த சங்கிலிவாடி கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மரியாதை செய்ய வைக்கப்பட்டது. இதனால் சங்கிலிவாடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.மேலும் காவலர் விஜயன் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மையானத்தில் 21 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags :