சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலாவதாக பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.

by Admin / 10-08-2026 02:35:01am
 சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலாவதாக பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.

 இன்று தமிழக சட்டப்பேரவையில் அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலாவதாக பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட வேண்டும் என்றும் இந்திய அரசியலமைப்பு வழங்கி உள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் தமிழ்நாட்டின் மரபு மற்றும் அடையாளத்தை நிலை நிறுத்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம் மற்றும் அண்மையில் திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது காரணமாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 

 

Tags :

Share via
Logo